Description
இராமச்சந்திரா தொகுதியின் இரண்டாம் பாகம், உங்களை பின்னோக்கி அழைத்துச் செல்லும். துவக்கத்திற்கும் முன்னால் அவள்தான் நாம் தேடும் வீரமங்கை. அவதரிக்கக் காத்திருக்கும் தெவம். அவள் தர்மம் காப்பாள். நம்மைக் காப்பாள்.
இந்தியா. கி மு 3400. பிரிவினை, அசூயை மற்றும் வறுமை, தேசத்தைப் பிடித்தாட்டுகின்றன. மக்கள், மன்னர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் முழு உருவமான மேல்வர்க்கத்தை அருவருத்து ஒதுக்குகின்றனர். ஒரே ஒரு தீப்பொறி போதும்; சமூகச் சீர்கேடு வெடிக்கக் காத்திருக்கிறது. அந்நியர்கள் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். செவதறியாது செயலிழந்த சப்தசிந்துவிற்குள் இலங்கையின் அரக்க மன்னன் இராவணனது கொடூர நச்சுப்பற்கள் ஆழமாக இறங்கிவிட்டன. அநாதைக் குழந்தையொன்று வயலில் கண்டெடுக்கப்படுகிறது. குதறத் துடிக்கும் ஓநாக்கூட்டத்திடமிருந்து பருந்து காக்கும் அதிசய குழந்தை. அரசியல் செல்வாக்கற்று, சுற்றியுள்ள இராஜ்யங்களால் புறக்கணிக்கப்பட்ட மிதிலைச் சிற்றரசின் மன்னனால் வளர்க்கப்படுகிறாள், அவள். வளர்ந்து என்ன சாதித்துவிடப்போகிறாள்? என்பதே மக்களின் கேள்வி; அவள் குறித்து அவநம்பிக்கை; அலட்சியம். ஆனால், அவர்களது கணிப்பு தவறு. இவள் சாதாரணப் பெண் அல்ல. இவள் சீதா.
அமீஷின் புதிய நூலின் மூலம், இக்காவியத்தின் அதிசய பயணத்தை – தத்துக்குழந்தை மக்களின் பிரதம மந்திரியாக உயர்ந்து, அவர்கள் தொழும் தெவமாக அவதாரமெடுக்கும் அபூர்வ வரலாற்றை – தொடருங்கள்.
- Publisher : Westland (17 July 2018)
- Language : Tamil
- Paperback : 375 pages
- ISBN-10 : 9386850974
- ISBN-13 : 978-9386850973
Reviews
There are no reviews yet.